அமைச்சர் மன்சூரின் அயராத முயற்சியினால் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடம்!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல்நடல், பாடசாலை சாதனையாளர்கள் கௌரவிப்பு, மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கல் போன்ற முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதியாக கலந்த கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஸ்.சஹூதுல் நஜீம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பொறியியலாளர் ஏ.அறுண், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஆப்தீன், வீ.ரீ.சகாதேவராஜா, அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.(ந)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -