இன உறவுகளை முறியடிக்கும் தீயசக்திகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை-முதலமைச்சர் நஸீர்!

ஏஎம் றிகாஸ்-
டந்த காலத்தில் தமிழ்- முஸ்லிம் இன உறவினை சீர்குலைப்பதற்கு எந்த எந்த சக்திகள் சதி முயற்சிகளில் ஈடுபட்டதோ, அதே குழு ஜனநாயகத்துக்குள் தலைதூக்கி மீண்டும் இன உறவுகளை முறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள ஆட்சியில் இன, மத வேறுபாடுகளுமின்றி செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஓட்டமாவடி-அறபா வித்தியாலயத்தில் வகுப்பறை மாடிக்கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் ஏஎம்எம். கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்ரீஎம் அஷ்ரப் கோரளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மீராசாகிபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்பிருந்த 'பிள்ளையான்' தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்திருக்கிறது என்பதற்காக பாரிய காழ்புணர்ச்சியில் திட்டமிட்டு இனங்களைப் பிரிப்பதற்கான முரண்பாடான கருத்துக்களைக் கூறுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. அதை வன்மையாகக் கண்டிப்பதோடு உங்களுடைய சதித் திட்டங்கள் தெரியாதளவிற்கு எங்கள் அரசியல் நிலைப்பாடு இல்லையென்பதை பிள்ளையானுக்கு மட்டுமல்ல அவரைப்போன்ற கீழ்த்தரமான அரசியல் தலைமைகளுக்கு கூறிக்கொள்கிறேன்.

நீங்கள் எதைச் செய்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய இணைப்பு ஓர் இறுக்கமானது, எங்களுடைய அபிலாசைகளுக்கு அப்பால் இம்மாகாணத்திலே தமிழ் - முஸ்லிம் உறவு இணைக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்ற அரசியல் தலைமைகளாக நாங்கள் இருந்துவருகிறோம்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி பணிப்பாளராக இருந்தவர் கல்வி அமைச்சராக கிடைத்துள்ளமை மாகாணத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி. மாகாணத்தில் இன ஒற்றுமையுடன் கல்வியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நடவடிக்ககைளை மேற்கொண்டுவருகிறோம்.

அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து சிறுபான்மை சமூகத்தினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு பறிப்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கமாளிக்கப் போவதில்லை. அதனை வன்மையாக நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த அரசியல் சட்ட திருத்த முறையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறையாதளவிற்கு மாற்றம் வந்தால் மாத்திரமே எங்களுடைய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கும். இன்றி இந்த திட்டமிட்ட அரசியல் சதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் குரல் கொடுக்கத் தயங்கப் போவதில்லை என்பதை இந்த அரசாங்கத்திற்கும் இவ்வாறான திட்டங்களை உருவாக்கும் அமைச்சர்களுக்கும் நாங்கள் கூறிக்கொள்கிறோம்.

உங்களுடைய சதிகள் கடந்த காலத்தைப் போல் 35 வருடங்கள் இந்த நாட்டை இரத்த வெள்ளத்திற்கு இட்டுச் செல்லும் அந்த வரலாற்றுத் துரோகத்தை மீண்டும் செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். பார்த்துக் கொண்டிருக்கும் சமுகமாக நாங்கள் இருக்கப் போவதுமில்லை என்பதை அரசாங்கத்திற்கும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்' என்றார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -