ராஜிதவின் கருத்து மிக கவலையடையச் செய்துள்ளது - சட்டத்தரணி முஸ்தபா

அபூ-இன்ஷாப்-

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ள பதவிகளுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மதம் கூட மாறுவார் என்ற கருத்து இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் புனித ரமழான் மாதத்தில் கவலையடையச் செய்துள்ளதாகவும் இந்த அரசு முஸ்லீம் சமூகத்தின் மீது வைத்துள்ள கபடத்தானமான பரிவையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் தெளிவாக அறியமுடிகின்றது.

அமைச்சரின் இந்த கருத்தை வண்மையாக கண்டிப்பதாக சம்மாந்துறை சலாமியா சமூக சேவைகள் அமைப்பின் ஆலோசகரும், முன்னாள் சம்மாந்துறைப் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இன்று (27) காலை சம்மாந்துறையில் சலாமியா சமூக சேவை அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற எதிர்காலத்தில் சம்மாந்துறையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில் இந்த நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்த கொடூரமாண ஆட்சியினை இல்லாமல் செய்து ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்காக உழைத்த இந்த அரசில் அரங்கிலே முஸ்லீம் மக்களின் குரலாகவும், சர்வதேச ரீதியான அங்கிகாரத்தை பெற்றுள்ள அமைச்சரவையின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கின்ற அiமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து தொடர்பாக ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்திடமும், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்;.

அமைச்சர் ராஜித அவர்கள் மற்றுமொரு ஊடக அறிக்கையில் தெரிவித்த கருத்தானது நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கான எமது போராட்டத்தின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

இந்தக் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளமுடிகின்றது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்பட்டு உறுப்பினர்களை தம்வசப்படுத்திக் கொண்ட நிலையில் எந்தவொரு எதிர்பார்ப்புக்களுமில்லாத நிலையில் தனது சமூகத்துக்காக சகலவற்றையும் இழந்துவிட்டு நல்லாட்சிக்காக மக்களை ஒன்றினைத்த ஒருதேசிய தலைவர் மீது பொறுப்புணர்வற்ற விதத்தில் பொறுப்புமிக்க அமைச்சரவையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்துள்ளமை வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித அவர்களைக் கூட பாராளுமன்றம் அனுப்பி இந்த அமைச்சரவையில் அமரச்செய்த அவர்பிரதிநிதித்துவப் படுத்தம் பிரதேச பெரும்பாலான முஸ்லீம்களும் அமைச்சரின் கருத்தை எதிர்த்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் சட்டத்தரணி முஸ்தபா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -