ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் 26–ந் தேதி முதல் சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்தது சவூதி கூட்டுப்படைகள். இன்றும் அங்குள்ள ஜூமைனே ராணுவ தளத்தை நோக்கி குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதை அறிந்த சவூதி கூட்டுப்படைகள் ஏழு முறை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
குறிப்பாக, ஹவுதியின் கோட்டையாக கருதப்படும் சாடா மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 45 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களில் 20 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
தினதந்தி
