400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழா நாளை




பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஹிறா பௌண்டேஷடன் நிதியுதவியுடனும் ,இப் பள்ளிநிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.


மேற்படி 400 வருடங்கள் பழமைவாய்ந்த இப் பள்ளிவாயளின் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 25-06-2015 நாளை வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்படவுள்ளது.


இதில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு இப் பள்ளிவாயல் நிருவாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -