அஷ்ரஃப் சமத்-
கடந்த கலங்களில் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு சென்ற அரசியல்வாதிகளை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்ளவோ அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்கபட மாட்டது என ஐக்கிய தேசிய கட்சி சிரேஷ்ட உறுப்பினரும் பொருந்தோட்டதுறை அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இன்று தென்னை பயிர் செய்கை சபை தலைவர் ஹிதாயத் சத்தார் அவர்கள் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் இன்று சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் எம்மோடு இணைந்துகொள்ள கேட்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளில் முப்பது சதவீதமான வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
