20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக கட்சிகளினது முக்கிய கூட்டம்!

ஷபீக் ஹுஸைன்-

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக சிறிய கட்சிகளினதும், சிறுபான்மையின கட்சிகளினதும் முக்கிய கூட்டம் ஒன்று தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அனுரகுமார திஸாநாயக்க, ஆர். யோகராஜன், எம்.எஸ்.எம். அஸ்லம், மாகாணசபை உறுப்பினர் அஸாத் சாலி, மனோ கணேசேன், நிசாம் காரியப்பர், குமர குருபரன், வை.எல்.எஸ். ஹமீட், நௌஷாத் அப்துல் மஜீத், நஜா முஹம்மத், சரத் அதுகோரல, சரத் மனமேந்திர, சிறிதுங்க ஜயசூரிய, எஸ். மஹேந்திரன் ஆகியோர் உட்பட சிறிய கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டு மிகவும் காரசாரமாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். 

அடுத்துவரும் நாட்களில் அக்கட்சிகள் மேற்கொள்ளப்போகும் அதிரடி நடவடிக்கைகள் பற்றி தீவிரமாக தற்போது கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -