நூர்-
சுடர் ஒலி தேசிய பத்திரிகை வருடாவருடம் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்று கொடுக்கும் நோக்கில் நடாத்திவரும் புலமைசுடர் கருத்தரங்கு இம்முறை சிம்ஸ் தனியார் பல்கலைகழக அனுசரணையில் தென்கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.
கடந்த 6 வருடங்களாக அல் -மீசான் பௌண்டஸன் அனுசரணையில் இந்த கருத்தரங்கை நடாத்திவந்த சிம்ஸ் தனியார் பல்கலைகழகம் இம்முறை நவமணி பத்திரிகையின் அனுசரணையில் நடாத்தியது குறிப்பிட தக்கது.
இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அதிகளவிலான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கருத்தரங்கை இலங்கையின் புகழ் பெற்ற பல புலமைப்பரிசில் சார் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள் வழிநடத்தினர். இந்நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி முகம்மது இஸ்மாயீல், சிம்ஸ் பல்கலைகழக முதல்வரும் SEUSL முன்னாள் பேரவை உறுப்பினருமான அன்வர் எம் முஸ்தபா மற்றும் பல உடகவியலாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.


