2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தவர் பி.எஸ்.ஏ! துபாயில் புத்தக புகழாரம்

றைந்த கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹ்மான் வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து ' அன்பின் வள்ளல் அப்துர் ரஹ்மான் ' என்ற புத்தகம் துபாயில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செய்யது அஹமது முத்து ஆலிம் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். ஈமான் கல்ச்சுரல் சென்ட்ரல் தலைவர் ,அரேபியா ஹோல்டிங் குரூப் வைஸ் சேர்மன் & நிர்வாக மேலாளர்

பி எஸ் எம் ஹபீபுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.

செய்யது அப்துல் காதர் தலைமை வகித்து நூல் ஆசிரியர்கள் திருச்சி செய்யது மற்றும் கீழக்கரை இம்தியாஸ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியை ஈமான் துணை பொது செயலாளர் தாஹா தொகுத்து வழங்கினார்.
பின்னர் முதல் பிரதியை ஹபீபுல்லாஹ் வெளியிட உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க தலைவர் இன்ஞ்னியர் செய்யது அப்துல் காதர் ,நரம்பீயல் டாக்டர் சீனிவாசன் ,பி.எஸ்.ஏ.ஆரிப் புஹாரி, செய்யது புஹாரி,எம்.எம்.முஹைனுதீன்,இத்ரீஸ்,வெஸ்டர்ன் ஆட்டோ கமால்,ஆபித் ஜீனைத் உள்ளிட்டோர் பிரதிகளை பெற்று கொண்டனர்.

இஞ்சினியர் செய்யது அப்துல் காதர்,எம் எம் முஹைனுதீன் ,ஆரிப் ரஹ்மான் புஹாரி , நூலாசிரியர் இம்தியாஸ் ,சொற்பொழிவாளர் கீழை மஹ்ரூப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சீனிவாசன் சிறப்புரையாற்றி நோய் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

இப்புத்தகத்தை இலவசமாக அச்சிட்டு வெளியிட ஏற்பாடு செய்த‌ ஈமான் கல்ச்சுரல் சென்டர் தலைவர் ஹபீபுல்லா மற்றும் சமுதாய புரவலர் அக்பர்கான் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மற்றும் புரவலர் அக்பர்கான் மகன் சுஹைல் அக்பர்கானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இப்புத்தகத்தை எழுதி வடிவமைத்த கீழக்கரை இம்தியாஸ் மற்றும் திருச்சி செய்யது ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஈமான் தலைவர் பிஎஸ் எம் ஹபீபுல்லா பேசும் போது

சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளார். அவரின் நிறுவனத்தில் பணியாற்றிய என்னை போன்ற சொந்தக்காரர்களை நிறுவனத்தின் பங்குதாராக்கினார் என்பவை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை பேசினார்.

பி எஸ் ஏ மகனார் ஆரிப் ரஹ்மான் புஹாரி பேசும் போது

வாப்பாவின் பல பல பல நற்பணிகளை சொல்லி கொண்டே போகலாம் அதில் குறிப்பாக இடிஏ நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை பயன்படுத்துவதில் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவார். அதை செய்தும் காட்டினார். நாமெல்லாம் அதனை கடைபிடித்தோமா என்று தெரியவில்லை.
அவர் எங்களுக்கு விட்டு சென்ற சொத்துகளை விட பெரிதாக நினைப்பது அவர் விட்டு சென்ற நற்பெயர்தான் என்றார்.

இன்ஜினியர் செய்யது அப்துல் காதர் பேசும் போது.

ஹாங்காங் துபாய் என கீழக்கரை பகுதி மக்களுக்கு அடையாளம் காட்டி வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர் என்றால் அதில் மிகையில்லை.அவர் வியாபார வாழ்க்கையில் தோல்விகளும் ஏற்பட்டது உண்டு ஆனால் துவண்டதில்லை மிகவும் தைரியாமானவர் ,மனிதர்களை மதிக்க தெரிந்தவர் என்று மேலும் அவரின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.

மற்றும் எம் எம் முஹைதீன், சொற்பொழிவாளர் கீழை மஹ்ரூப் நகைச்சுவையுடன் அன்றாட வாழ்வியல் சம்பவங்களை சுவைபட எடுத்து கூறினார் நிகழ்ச்சியின் இறுதியில் சலீம் அன்சாரி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஈமான கல்ச்சுரல் சென்டர் சார்பில் விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின் ,கல்விக்குழு செயலாளர் ரசாக்,ஈவெண்ட் செயலாளர் சாதிக் நிர்வாக துணை செயலாளர் யாகூப், ஆடிட்டர் அக்பர் பாஷா ,கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லாஹ் ,எஸ் கே வி சேக், நிர்வாக செயலாளர் காதர்,மூன் மீடியா ஹிதாயத்துல்லாஹ் மற்றும் அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், மக்கள் தொடர்பு செயலாளர் அன்சாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கீழை ஜமீல் கூறுகையில் ,

உலகத்திலேயே தனது நிறுவனத்தில் பணியாற்றியவர்களை பங்குதாரகளாக உருவாக்கி அழகு பார்த்தவர் மறைந்த பி எஸ் ஏ அவர்கள்தான் மறக்க முடியாத மனிதர் அவர் என்றார்.

அமீன் 
(துபாய்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -