விரைவில் அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஏற்படுத்தவுள்ளதாக, தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் விரைவில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்ளும் பொதுமக்களும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இலவச WiFi சேவை, ஏற்கனவே ரயில் நிலையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொது இடங்களில் இந்த சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ச
