இறக்காமம் பாடசாலை தொடர்பாக: நஸீர் MPCயுடன் முக்கிய சந்திப்பு!

அபு அலா -

ம்பாறை - இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சபையினருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பொன்றும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று காலை (04) கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் உத்தியோக பூர்வ அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினரின் இறக்காமம் மக்கள் தொடர்பாடல் அதிகாரி கே.எல்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்தித்துபோது, இறக்காமம் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பாடசாலைத் தேவைகள் தொடர்பான கருத்துக்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் முன்வைத்தனர்.

மேலும் இப்பாடசாலை சம்மாந்துறை வலய இறக்காமம் கோட்டத்திலுள்ள 1AB  தரத்தையுடைய ஒரு மூலாதாரப் பாடசாலையாகும். இப்பாடசாலையில் 6 – 13 வரை சுமார் 1000 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

அதுமாத்திரமல்லாமல் இப்பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்களின் மாணவர்களும் இப்பாடசாலையில்தான் உயர் கல்வியை கற்பதற்காக நம்பி வருவதாகவும், இப்பாடசாலையில் நிலவும் சில குறைபாடுகள் காரணமாக அங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், நிருவாக நடவடிக்கைகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும் இக்குழுவினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் கருத்து தெரிவிக்கையில்;

கல்வி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல மார்க்க விடயங்களுக்குமாக நான் என்றும் உயிர் ஊட்ட விரும்புவபன் அதற்காக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியயையும் தாண்டி தனிப்பட்ட நிதியயையும் வழங்கி இந்த விடயங்களை உயிரூட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்து இப்பாடசாலைக்கு என்னாலான உதவிகளை செய்து தருகின்றேன் என்றார்.

இச்சந்திப்பில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில், அதிபர் ஏ.ஹார்தீன், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.சாபி, பிரதி அதிபர் கே.எம்.றிபாஸ், சட்டத்தரணி பாறூக் சாகிப் ஆகியோர் கலந்து கொண்டர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -