மைத்திரி - மஹிந்த இடையே புதனன்று சந்திப்பு: பல சிக்கல்களுக்கு தீர்வு!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் எதிர்வரும் 06ஆம் திகதி புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள கட்சியின் தலைவர்கள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா ஊடகத்திடம் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டார். 

எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் இன்னாள் தலைவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் அது இவ்வாறு அமையும் என்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என டிலான் பெரேரா தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -