அம்பாறை பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சூறா சபையின் உதுமாபுர கிராமத்துக்கான கிளைக்குழு தெரிவும் பொதுக் கூட்டமும் சனிக்கிழமை இரவு (2) பாலமுனையில் இடம்பெற்றது.
பாலமுனை சூறா சபையின் மற்றுமொரு முயற்சியின் பயனாக உதுமாபுர கிராமத்தைச் சேர்ந்த தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருடன் அதிருப்தியுற்ற கடசியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் பலர் இந்த கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சூறா சபையில் இணந்து கொண்டனர்.
இந்கிகழ்வில் பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, முன்னாள் மத்திய குழு தலைவரும் சூறா சபையின் தலைவருமான ஐ.எல்.சுலைமாலெவ்வை, சின்னப்பாலமுனை அமைப்பாளர் சலீம் சிக்கந்தர், இணைப்பாளர் எம்.ஏ.சதாத் மற்றும் முக்கியஸ்தர்களான ஏ.எல்.அலியார், எம்.எம்.ஹலீம், கவிஞர் பாலமுனை முபீத், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ச.jpg)