றியாஸ் ஆதம்-
ஏறாவூர் மண்ணுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொடுத்தவன் நானே எனவும் அதற்காக உதவி கோரிய போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த பதின் மூன்று உறுப்பினர்களுடைய ஆதரவினையும் பெற்றுக்கொடுத்தவனும் நானே என கிழக்கு மாகாண முன்னால் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
ஏறாவூர் இரும்பு வியாபாரிகள் சங்கத்திற்கு சைக்கிள் உதிரிப்பாகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17.05.2015) நேற்று முன்தினம் ஏறாவூர் மிச்சிநகர் கிராமத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
இவ்வாறு முதலமைச்சருக்கு உதவிய எனக்கு கிடைக்கவிருந்த அமைச்சுக்கு இறுதியில் ஆப்பு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சரை ஒரு நல்ல மனிதர் என நினைத்தேன.; கடைசியில் எங்களுடைய உதவிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு எங்களுக்கே துரோகமிழைத்து விட்டார். எனது பகுதி மக்களுக்கு என்னால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகள் எல்லாம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உங்களுடைய ஊரைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் சுபையிர் ஹாஜியாரும் அபிவிருத்தி வேலைகளை செய்கின்ற போது தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அறிந்துகொண்டேன்.
உங்களுடைய மகாண சபை உறுபப்பினர் சுபையிர் அவர்கள் இந்தப் பிரதேசத்துக்கு வேறு அரசியல் வாதிகளால் செய்ய முடியாத பல அபிவிருத்தி வேலைகளைச் செய்துள்ளார் குறிப்பாக தனிக் கல்வி வலயம், ஆதார வைத்தியசாலை, பிரதேச சுகாதார பணிமனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம், பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் மீள்குடியேற்ற கிராமங்கள் என பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளார். அதனையும் தான்டி அவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த போது அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்ததுடன் பல தொழில் வாய்ப்புகளையும் வழங்கினார்.
ஆனால் இந்த முதலமைச்சர் விவசாய அமைச்சராக இருந்தபோது உங்களது இம்மண்ணுக்கு எதுவித அபிவிருத்திகளையும் செய்யாமல் இம்மண்ணை ஏமாற்றினார.; இப்போது முழு மாகாணத்தினையும் ஏமாற்றுகின்றார் ஆனால் அவரால் சேவை செய்யமுடியாது. பணத்தின் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எவரும் மக்களின் நன்மை கருதி சேவை செய்த வரலாறும் கிடையாது. ஆனால் இன்று அரசியல் வியாபாரமாக்கப்பட்டுள்ளது; கிழக்குமாகாண சபையை பயன்படுத்தி வியாபாரம் நடத்துவதனை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மிக விரைவில் மாகாண சபையில் இவர்களுடைய சகல விடயத்தையும் வெளிப்படுத்துவோம். ஆகவே எதிர்காலத்தில் நீங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படவதனூடாக இவ்வரசியல் வியாபாரிகளுக்கு தக்கபாடம் புகட்ட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)