கஹவத்தை - கோடகேதன பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏழ்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பொலிஸ் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கோடகேதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை குறித்த ஏழ்வரும் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
