பொறளை ஜும்ஆ பள்ளி தாக்கப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கண்டனம்!

ஜே.எம்.வஸிர்-

பொறளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது 2015.05.30 இரவு கல்வீச்சு நடாத்தி பள்ளிவாசலுக்கு சேதத்தினை ஏற்படுத்திய சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமனா ஏ.எல்எம்.அதாஉல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ,

நாட்டில் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இக்காலகட்டத்திலும் பள்ளி வாசல்கள் மீது அராஐகம் செய்து முஸ்லிம் சமூகத்தினுடைய உணர்வுகளோடு விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகளை இம் மண்ணில் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை பாரபட்சமின்றி உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை பொறுமை காக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -