வித்தியா கொலை விவகாரம்: விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை - பொதுபல சேனா

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்தக் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனினும், விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இரத்தினபுரி கொட்டகதனவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

அப்போது விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதா? வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு மற்றுமொரு நீதியும் அமுல்படுத்த முடியுமா?

முழு நாட்டிற்கும் ஒரே நீதி அமுல்படுத்தப்பட வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -