எஸ்.அஷ்ரப்கான்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா நேற்று (02) சனிக்கிழமை அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையங்களை திறந்து வைத்தார்.
கட்சியின் பிரதேச மத்திய குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும், தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ். சுபைர், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் பணிப்பாளருமான சீ.எம்.முபீத், கட்சியின் நாவிதன்வெளி, மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் தொழிலதிபர் அன்வர் முஸ்தபா ஆகியோருடன் இலங்கை பிடைவை மற்றும் ஆடை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் இணைப்புச் செயலாளருமான ஏ.எம்.ஏ.லத்தீப், கட்சியின் கல்முனை இணைப்பாளர் ஏ.எல்.எம்.அஷ்ரப் ஆகியோரும் கட்சியின் முக்கியஸ்தர்களும், தொழிற்பயிற்சியை பெறும் யுவதிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கட்சியின் நாவிதன்வெளி, மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதிர் பொத்துவில் பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரண கொள்வனவிற்காக காசோலையினை வழங்கிவைத்தார். இன்றும் நாளையும் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இப்பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)