ஹாசிப் யாஸீன்-
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கான முறைப்பாட்டுப் பெட்டியினை வழங்கி வைத்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், உளவளத் துணை உத்தியோகத்தர் ரீ.எம்.எம்.ஹப்றத் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பிரிவிலுள்ள 9 பாடசாலைகளுக்கு இம்முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. றி
.jpg)