அமெரிக்காவில் வீட்டு உபயோகப்பொருள் கடை உரிமையாளராக இருந்த 52 வயதான மேதானந்த குருப்பு என்ற இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சன்லெர் கெய்ல் வென்டீஸ் என்ற 19 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 28ஆம் திகதி குறித்த கடைக்குள் முகமுடிந்த அணிந்த இருவர் சென்று குருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிசிரிவி கமராவில் இவர்களின் முகம் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிதாரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள குருப்பு பல முயற்சிகள் எடுத்த போதும் துப்பாக்கிதாரிகள் அவரை மார்பில் சுட்டுக் கொலை செய்தனர்.(ந)
