ஹாசிப் யாஸீன், எம்.ஐ.சம்சுதீன்-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து வில்லைகளை காத்தான்குடி லைப் கெயா நிறுவனம் வழங்கி வைத்துள்ளது.
இம்மருந்து வில்லைகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (07) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் வைத்திய அதிகாரியுமான டாக்டர் என்.ஆரிப் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவ விற்பனை பிரதிநிதியும், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் உறுப்பினருமான சிறாஜ் அஹமட், அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் ஏ.ஆதம், உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.சம்சுதீன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம்மருந்து வில்லைகளை காத்தான்குடி லைப் கெயா நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஐ.எம்.அல்பர் சார்பாக மருத்துவ விற்பனை பிரதிநிதி சிறாஜ் அஹமட்யினால் அபிவிருத்திச் சபையிடம் வைபவ ரீதியாக கையளித்து வைக்கப்பட்டது.
இதன்போது இம்மருந்து வில்லைகளை வழங்கி வைத்த குறித்த நிறுவனத்திற்கு சாய்ந்தமருது மக்கள் சார்பாகவும், சபையின் சார்பாகவும் அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் நன்றிகளை தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை அடுத்து அபிவிருத்திச் சபையினர் தனியார் நிறுவனமான காத்தான்குடி லைப் கெயா நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இம்மருந்து வில்லைகள் வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. றி
.jpg)
.jpg)