சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா!

எஸ்.அஷ்ரப்கான்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார்.

கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர் எஸ்.ரீ. கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் நாவிதன்வெளி, மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் தொழிலதிபர் அன்வர் முஸ்தபா ஆகியோருடன் இலங்கை பிடைவை மற்றும் ஆடை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் இணைப்புச் செயலாளருமான ஏ.எம்.ஏ. லத்தீப், கட்சியின் கல்முனை இணைப்பாளர் ஏ.எல்.எம்.அஷ்ரப் ஆகியோரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப தலைவர் அஸீஸ், கட்சியின் முக்கியஸ்தர் ஜீனைதீன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.எல்.அன்ஸார், மத்திய குழுவின் முக்கியஸ்தர் இர்ஷாத் உட்பட தொழிற்பயிற்சியை பெறும் யுவதிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -