கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொண்டுவந்தது தனி சிங்களவர்களின் கொடியையாகும். பெரும்பாலானோர் இதனை குழப்பிக் கொண்டுள்ளனர் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனைக் கொண்டுவந்தது என்பதற்கு எதிராக யாரும் துள்ளிக் குதிக்க வேண்டியதில்லை. ஆதி அந்தம் தெரியாத முஜிபுர் ரஹ்மான் போன்றோர் கூத்தாட ஆரம்பித்துள்ளனர்.
இப்படி ஆட்டம் போட வந்தால் ஒரு பெரிய கலகத்தைத் தான் சந்திக்க நேரிடும். நாட்டின் வரலாற்றைத் தெரியாதோரே இன்று அரசியல் செய்கின்றனர்.
சிங்களவர்களின் கொடியைக் காட்டி இதுதான் தேசிய கொடி என்று கூறியிருந்தால், அது தவறு. யாரோ அந்த இடத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இன்றும் இந்தக் கொடி பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் எவரும் இதனை தேசிய கொடி எனக் கூறவில்லை.
இந்த கொடி சம்பந்தமாக எந்தவித அறிவும் இல்லாத எருமைகளும், கழுதைகளும் தான் பிரச்சினைப்பட்டுக் கொள்கின்றனர். இந்தக் கொடியை வேண்டிவர்களுக்குப் பறக்கவிட முடிவும்.
இருப்பினும், இந்த நிகழ்வில் இக்கொடியை வழங்கியவர்கள், அடுத்த வீட்டுக் திருமணத்தில் கொண்டு போய் உணவு பகிர்ந்தளித்த செயலையே செய்துள்ளனர் எனவும் தேரர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோட்டாபய சார்பு ஊர்வலமொன்றின் போது, சட்ட ரீதியற்ற சிங்கக் கொடியை ஏந்திப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இது குறித்து இன்றைய சிங்கள வார இதழொன்று பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. தேரரிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ச