மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் இயங்கிவரும் சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் ‘உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்’ எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் ஒன்றை 2015.05.30ஆந்திகதி சனிக்கிழமை மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடாத்தியது.
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஜனாப். ஏ.எம். அன்வர் (பிரதி அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய கலாநிதி Dr. கே. விவேக் தலைமையிலான வைத்தியசாலை குழுவினரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இவ்இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதாக நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி தெரிவித்தார்.




