எஸ்.எம்.அறூஸ்-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடம், மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த ஆர்கேட் திறப்பு விழா, முதல்வர் டாக்டர் ஜலால்தீன் வீதி பெயரிடல் மற்றும் பொதுக்கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி,தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும் கலந்து கொள்வதுடன்
விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொள்வதுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை, மாலை 5 மணிக்கு சந்தை சதுக்கத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மத்திய குழுவின் தலைவருமான ஏஎ.ல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகல அதிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடம் நான்கு கோடி முப்பது லட்சம் ரூபாவிலும், மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த ஆர்கேட் சந்தைக்கட்டடம் ஒரு கோடி எழுபது லட்சம் ரூபாவிலும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)