கல்முனை அபிவிருத்தி தொடர்பாக H.M.M.ஹரீஸ் அவர்களுடனான கலந்துரையாடலும் மகஜர் கையளிப்பும்!

முகம்மது காமில்-
ல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்தி செய்து எதிர்காலத்தில் அதன் அபிவிருத்தி திட்டங்களை தடையின்றி முன்கொண்டு சென்று இலங்கை தேசத்தின் முன்னோடியான நகரமாக மாற்றம் செய்வது தொடர்பாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ H.M.M.ஹரீஸ் அவர்களுடனான மேற்படி கலந்துரையாடல் நேற்று முந்தினம் 24.05.2015 (ஞாயிறுக் கிழமை) காலை 10 மணிக்கு கல்முனைக்குடி ஜும்மாஹ் பள்ளி வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ H.M.M.ஹரீஸ் அவர்களுடன் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் S. அப்துல் சமத் செயலாளர் S.L.M.இப்ராஹீம், அதன் நிருவாக குழு சார்பாக வைத்தியர் MM.ஜசீலுல் இலாஹி மற்றும் வைத்தியர் முஹம்மது ரிஸ்பின், பொறியியலாளர் A.J.முஹம்மது ஜவ்சி, பொறியியலாளர் முஹம்மது ரிஸ்கான், சிரேஸ்ட விரிவுரையாளர் M.B.M.இர்ஷாத், கல்வி அதிகாரி முகம்மது சத்தார், ஆசிரியர் முஹம்மது ஜின்னாஹ், கல்முனை பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி அப்துஸ் சமத் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மாநகரில் பின்தங்கிய நிலையில் காணப்படும்

1. கல்முனை பிரதேச கல்வி மற்றும் பாடசாலை அபிவிருத்திகள்
2. பொருளாதார அபிவிருத்தி
3. வீதி அபிவிருத்தி மற்றும் கல்முனையின் உட்கட்டுமான பணிகள்
4. வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சுகாதார நலநோன்பு திட்டங்கள்
5. மக்களின் ஜீவனோபாய தேவைகள்
6. தொழில்வாய்ப்புகள்
7. கல்முனை எதிர்நோக்கும் தற்கால மற்றும் எதிர்கால அரசியல் சவால்கள் 

போன்ற மிகவும் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாறல்களும் இடம்பெற்றன.

இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ H.M.M.ஹரீஸ் அவர்கள் இவ் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பாக தாம் ஆராய்ந்து எதிகாலத்தில் எமது கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்களில் மேற்ப்படி முன்மொழிவுகளை உள்வாங்கி எமது பிரதேசத்தின் அபிவிருத்தியின் இலக்கை எட்டுவதற்கு பாடுபடுவேன் என்றும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் S.அப்துல் சமத் அவர்களினால் மேற்குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கல்முனை மனிதவள அமைப்பின் துறைசார் நிபுணர்களால் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மகஜர் ஒன்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ H.M.M.ஹரீஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -