முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரச சேவையில் ஈடுப்பட்டிருந்த போது அவரது ஓய்வூதிய கடிதம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட வேண்டியிருந்தது.
இக்கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய செயலாளர் அதனை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வந்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த செயலாளருக்கு தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுக்க முடியாமையின் காரணமாக அவர் கையெழுத்திடுவதை தவிர்த்து வந்தார் என அவரது கீழ்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஓய்வூதிய கடிதம் கிடைக்கப்பெறாமையின் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், சுங்கத்தீர்வை மூலம் வாகன இறக்குமதி செய்வதற்கான அனுமதிபத்திரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய செயலாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு கீழ்படிந்து செயலாற்றி வந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ச-
ஜே.வி.பி
ஜே.வி.பி