உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ், உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பல நாடுகளிலும் மிக மிக குறைவாக உள்ளது. மக்களிடையே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
அந்த வகையில் ஆண்களுக்கான ஜேர்மனி மாதப் பத்திரிகை ஒன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. ‘வங்கார்டிஸ்ட்’ என பெயரிடப்பட்டு உள்ள அந்த பத்திரிகை, எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த இதழ் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுடனான பேட்டிகள், அவர்களது அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்று உள்ளன. இதில் முக்கிய அம்சமாக, எச்.ஐ.வி. வைரஸ் தாக்கிய இரத்தம் கலந்த மையினால் பத்திரிகையின் அட்டைப்படம் அச்சிடப்பட்டது. இதற்காக எச்.ஐ.வி. பாதித்த 3 பேர் இரத்தம் கொடுத்து உள்ளனர்.
எய்ட்ஸ் பாதித்த நபரை தொடுவதனால் இந்த வைரஸ் பரவாது என்பதை மக்களிடம் உணர்த்துவது, இதற்கான நோக்கங்களில் ஒன்றாகும்.(ந)
