ந.குகதர்சன்-
மட்டக்களப்பு காக்காச்சிவட்டை பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் பிரதி தவிசாளர் வரவேற்பு நிகழ்வும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பும் செவ்வாய்கிழமை ஆலய முன்றலில் இடம்பெற்றது.
ஆலய தலைவர் எஸ்.கருணானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம் மற்றும் ஆலய நிருவாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மக்கள் சந்திப் இடம்பெற்றதோடு மக்களின் குறைபாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன், மக்கள் தங்களது பிரச்சனைகள் தொடர்பாக மகஜர்களையும் வழங்கி வைத்தனர். மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கடுமெனவும் மக்களுக்கு இதன்போது வாக்குறுதியளித்தனர்.
இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)