நேற்று குருநாகலையில் இடம்பெற்ற மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் நடந்தவை..!

கிந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் பல தற்போதைய அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பெற்றுக்கொண்ட சுதந்திரம் ஆபத்தில் – மகிந்தவுடன் மீண்டும் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பில் குருநாகல் பகுதியில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வைப்பு வட்டி விகிதங்கள் தற்போதைய அரசாங்கத்தில் குறைப்பதற்கான அறிகுறி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த பேரணியில் கலந்துக்கொண்ட விமல் வீரவன்ச இலங்கையில் தற்போது மேற்குலக சதிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாலினி பொன்சேகா, டலஸ் அழகப்பெரும, முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, குமார வெல்கம, வீ.கே. இந்திக, காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்தன, பந்துல குணவர்தன, சரத் குமார குணரத்ன, சரண குணரத்ன, டி.பி. ஏக்கநாயக்க, வை.ஜீ. பத்மசிறி, ஜகத் பாலசூரிய, லொஹான் ரத்வத்தே, கமலா ரணதுங்க, அருந்திக்க பெனர்ணான்டோ, பிரியங்கர ஜயரத்ன, ஜீ.எல்.பீரிஸ், அப்துல் காதர், ரஞ்சித் சொய்சா, மனுஷ நாணயக்கார, ஜானக வக்கும்புர, சேஹான் சேனசிங்க, மொஹான் சில்வா,

எஸ்.சி.முத்துகுமாரன, நிஸாந்த முத்துஹெட்டிகம, சாமிக தர்மதாச, தேனுக விதானகமகே, உதித்த லொக்குபண்டார, திலும் அமுனுகம, சரத் வீரசேகர, ஸ்ரீயானி விஜேவிக்ரம, டளஸ் அழகபெரும, ரொஸான் ரணசிங்க, எஸ்.எம். சந்திரசேன, ஜானக பிரியந்த பண்டார, தாராநாத் பஸ்நாயக்க, நிமல் விஜேசிங்க, ஜயரத்ன ஹேரத், விஜித பேரகொட,நிர்மல கொத்தலாவல, மாலினி பொன்சேகா ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இதன்போது கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -