மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் விட்டுச் சென்ற பணியில் எதனையும் செய்யாத தற்போதைய தலைமை!

எஸ்.அஷ்ரப்கான்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் விட்டுச் சென்ற பணியில் எதனையும் செய்யாத தற்போதைய தலைமை வாக்குகளுக்கு மட்டும் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் புதிய ஒரு விடயத்தை கையிலெடுத்து அரசியல் செய்து அம்பாரை மக்களை முட்டாள்களாக்க முனைகிறார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளருமான அன்வர் முஸ்தபா குற்றம் சாட்டினார்.

கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா அன்மையில் கல்முனையில் இடம்பெற்றபோது அதில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட அவர் மேலும் அங்கு உரையாற்றும்போது,

அம்பாரை மாவட்டத்தில் எவ்வளவோ அபிவிருத்தி தேவைகள் மக்கள் மத்தியில் குவிந்து கிடக்கிறது. இதனை செய்வதற்கு போதிய அதிகாரம், தன்னிடம் இருந்தும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் காரர்களால் எவ்வித வேலையையும் செய்ய முடியாத கோளைகளாக இவர்கள் இருக்கின்றார்கள். அதே பாசறையில் வளர்ந்த எமது தலைமை அமைச்சர் றிஸாட் பதியுதீன் பெரும் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து களத்தில் நின்று சேவையாற்றி வருகிறார்.

அந்த தொடரில்தான் அம்பாரை மாவட்டத்திற்கு எமது வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அயராத முயற்சியால் இன்று எமது கட்சி யுவதிகளுக்கான 19 தையல் பயிற்சி நிலையங்களை அம்பாரை மாவட்டம் முழுவதும் திறக்க முன்வந்தது. இதனுாடாக எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் பாரிய தொழிற்சாலைகள் இங்கு நிறுவப்பட உள்ளது. இதற்காக எமது கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் அம்பாரை மாவட்ட மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மாறாக தேர்தல் வருகின்றபோது கையாலாகாத முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது. ஒருபக்கம் பேரினவாதம், மறுபக்கம் வன்னி மக்களின் அழுகுரல் எல்லா துயரங்களையும் தாங்கிக்கொண்ட முஸ்லிம் சமூகத்திற்காக களத்தில் நின்று வேலை செய்யும் ஒரு தலைமையை தாம் அரவணைக்க வேண்டும். அம்பாரை மாவட்ட மக்கள் யாரும் சென்ற காலங்களில் எமது கட்சிக்கு வாக்களிக்க வில்லை. ஆனாலும் பல்வேறு துாரநோக்குள்ள சேவைகளை இன்று எமது கட்சி செய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மிக அவதானமாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸினால் ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றி தமிழ்,சிங்கள சமூகங்களும் பலநன்மைகளைப் பெற்றன. ஆனால் தற்போது எல்லாம் தமது கதிரைகளை காப்பாற்றும் போட்டி அரசியலையே மு.கா. செய்து வருகிறது. இது மக்களால் கண்டிக்கப்பட்டும் வருகிறது.

கடந்த ஜனாதிபத் தேர்தலுக்கு முன் கரையோர மாவட்டம் தரவில்லை என்பதற்காக மஹிந்த அரசைவிட்டு வெளியேறியமுஸ்லிம் காங்கிரஸ் இன்று மைத்திரியின் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புக்ளை பெற்றுக் கொண்டும் வாய் மூடி மௌனிகளாக இருக்கபின்றார்கள். அடுத்த தேர்தல் வரும்போது இதுபோன்ற புதிய ஒரு விடயத்தை வைத்து அரசியல் செய்ய களத்திற்கு வருவார்கள். இதனை மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளார்கள். எனவே எமது கட்சியின் துாரநோக்கு சிந்தனைக்கு மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் முயற்சிப்பதற்காக எமது கட்சியின் வியாபகத் தன்மையை அம்பாரையிலும் கொண்டுவர எமது கைகளைப் பலப்படுத்துமாறு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். 
அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லி தம்பட்டம் அடிப்பவர்கள் எதிர்காலத்தில் செல்லாக்காசுகளாக மக்களால் துரத்தப்படுவார்கள் எனபதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -