காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புதுவருட கலாசார விளையாட்டு விழா!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு சின்ன ஊறணி காந்தி கிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரைப் புதுவருட கலாசார விளையாட்டு விழா கழக விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கழக தலைவர் பெ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விளையாட்டு உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், கிராம பிரமுகர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மிட்டாய் ஓட்டம், முட்டி உடைத்தல், கறீஸ் மரம் ஏறுதல், தலையணைச் சமர், ஓட்டம், வினோத உடை, தேங்காய் திருவுதல், முட்டை மாற்றுதல், சமநிலை ஓட்டம், மயல் ஓடு;டம், மர்ம மனிதன், கிடுகு பின்னுதல் உட்பட பல விளையாட்டுக்கள் இடம்பெற்றது.

அத்தோடு விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை ஆகியவற்றில் சித்தி பெற்றவர்களும் அதிதிகளால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விளையாட்டு கழகத்தினால் ஐந்தாம் தர புலமைப் பரிசில் மாணவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டுவதற்காக கல்வி நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக கல்வி உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வழங்கி வைத்தார்.(ந)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -