நேபாள நாட்டு மக்களுக்காக சாய்ந்தமருதில் நிவாரண நிதி சேகரிப்பு!

ஹாசிப் யாஸீன்-
நிலநடுக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு மக்களுக்கு நிவாரண நிதி உதவிகளை சேகரிக்கும் பணியினை சாய்ந்தமருது பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் நேற்று (06) புதன் கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது வர்த்தக நிலையங்கள், தனவந்தர்கள், திவிநெகும சங்கங்கள் என்பவற்றிலிருந்து நிவாரண நிதி உதவிகளை சேகரித்தனர்.

இந்நிவாரணப் பணியில் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

சேகரிக்கப்பட்ட நிவாரண நிதிகளும் பொருட்களும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது. றி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -