போலி பாஸ்போட்டுடன் இந்திய விமான நிலைத்திற்கு சென்ற இலங்கையர் கைது!

ந்தியாவின் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலிப் பாஸ்போட்டுடன் பயணிக்க முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் சிவா என்பவரிடம் 500,00 ரூபாய் பணம் கொடுத்து போலி பாஸ் போட் தயாரித்து கொடுக்கும்படியும் தன்னை சுவிஸர்லாந்துக்கு அனுப்பி வைக்கும் படியும் கூறியுள்ளதாக தெரிகிறது. 

அவ்வாறே போலி பாஸ்போட்டை தயாரித்த சிவாவும் அவரை ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

எனினும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அது போலி பாஸ் போட் எனத் தெரியவந்துள்ளது. 

அதன் பின்னர் அவர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பின்னர் சந்தேகநபர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -