கற்பிட்டி பிரதேச மக்களின் தேவைகளை கண்டறிய அமைச்சர் றிசாத் குழு விரைவு!

இர்ஷாத் றஹ்மத்துல்லா -

டக்கிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களின் தேவைப்பாடுகள்,மற்றும் குறைகள் நேரில் கண்டறியும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்ற கிராமம் முதல் பாலாவி வரைக்குமான உள்ள அனைத்து கிராமங்களுக்குமான விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, தற்போது இங்கு வாழும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதே போல் மீள்குடியேறிய இக்கிராம மக்களின் தற்போதைய தேவைப்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டறிந்து கொண்டார்

அதே வேளை இப்பிரதேச யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்புக்களை பார்வையிட்ட அமைச்சர் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் போது தங்களது காணிகள் தொடர்பில் இம்மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அத்தோடு தாங்கள் தற்போது வாழும் பிரதேசங்களில் அரச நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அங்கீகாரம் வழங்கப்படாமையினால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும்,இந்த மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றினை இன்னும் சில தினங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

அமைச்சருடன் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரதேச சபை தலைவர் எஹ்யான்,முசலி பிரதேச சபை உறுப்பினர் அப்துர் ரஹ்மான்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சனுாஸ்,அமைச்சரின் இணைப்பாளரும் முஜாஹிர்,முளப்பர்பகான்,குலாம் காதிரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -