ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பௌத்த மக்களின் விஷேட தினமாக வெசாக் தினம் விளங்குகின்றது புத்தபெருமானின் பிறப்பு, பரிநிர்வாணம் அடைந்தமை மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முக்கியமானதொரு நாளாக வெசாக் தினம் முழு பௌத்த மக்களாலும் தற்போது கொண்டாடப்படுகின்றது.
இந்த வகையில் தலை நகரம் கொழும்பிலும் வெசாக் தினம் கலை கட்டியுள்ளது. நேற்றுக் காலையில் இருந்தே பௌத்த மக்கள் வெந்நிற ஆடைகளணிந்து விகாரைகளுக்குச் சென்று விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக கொழும்பு நகரில் இன்று பௌத்த விகாரைகளில் பக்தர்கள் நிறைந்து காணப்படுவதுடன் தலை நகரமே வெசாக் கூடாரங்கள், தோரணங்கள் மற்றும் அன்னதான கொட்டகைகள் பல காணப்படுவதுடன் அவையனைத்தும் பௌத்த கொடிகளாலும் வர்ண நிற மின் குமிழ்களாலும் அலங்காரிங்கப்பட்டு காட்சியளிப்பதையும், பெருந்திரலான மக்கள் வெசாக் அலங்காரங்களை கண்டு கழிப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்து கொண்டிருப்பதையும், பெருந்திரலான மக்கள் நீண்ட வரிகைகளில் நின்று அன்னதானக் கொட்டகைகளுக்கு செல்வதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக கொழும்பு நகரமும் அதனை அண்டிய பகுதிகளில் பாரியளவு வாகன நெரிசல்களும் காணப்படுவதையும் அவதாணிக்க முடிகின்றது.
இதேவேளை கொழும்பு பிரதான பஸ்தரிப்பு நிலைய அரச மரத்தடிச் சந்தி, கங்காராமை, கிரேண்ட்பாஸ் சந்தி, பேலிகொட, தெமடகொட, கொட்டகேன போன்ற இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் புத்தபெருமானின் வாழக்கை வரலாறுகளை சித்தரிக்கும் பாரியளவான வெசாக் அலங்கார கோபுரங்கள் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.sa
