வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிம் சகோதரர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதாகவும், அதற்கு தீர்வு பெற்றுத்தருமாரு கோரி இன்று செவ்வாய்கிழமை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிக்குரிய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லீம் சகோதர்கள் தடையாக இருப்பதாகவும் அதனால் எங்களது காணிகளை தங்களுக்கு மீட்டுத்தருமாரும் கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீறாவோடை தமிழ் பிரதேசத்தில் இருந்த பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களும் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான பாதை வழியாக ஊர்வலமாக வந்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினையும் உதவி பிரதேச செயலாளரிடம் சமர்பித்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், அக் காணிப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக மாவட்டச் செயலாளருக்கு தெரியப்படுத்துவதுடன், வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்வதாகவும், இன்றில் இருந்து அத்துமீறி காணிகளை சட்ட விரோதமாக பராமரிக்க வருபவர்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று வாழைச்சேனை பொலிஸார் உறுதியளித்ததையடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)