எதிர்வரும் 15ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
23 மா நகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் கலைக்கப்பட உள்ளன.
335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக் கோரப்பட்டு முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதன் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீடித்திருந்தது.
ச
