எதிர்வரும் 7ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெறவிருக்கும் அனைவரும் இன்று(05) இரவு 8மணிக்கும் முதல் உங்களது கடிதத்துடன் தொலைபேசி இலக்கத்தினையும் அனுப்பிவைக்குமாறு முதலமைச்சின் ஊடக செயலாளரும்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல். முனாஸ் கேட்டுக்கொண்டார்.
விபரங்களை அனுப்ப வேண்டிய ஈ-மெயில்-> media.eastcm@gmail.com
இதேவேளை, இன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியான ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள், மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் இன்று (05) கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசமை அவரது அமைச்சில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1700க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எக்காரணம் கொண்டும் கிழக்கில் பயிற்சி முடித்த ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் முயற்சியை உடனே கைவிட்டு அவர்களுக்குரிய மாவட்டப் பாடசாலைகளிலேயே அவர்களை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீ.மு.காங்கிரஸ் குழுவினர் கல்வி அமைச்சரை கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ச
