ந.குகதர்சன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் வைத்து 02 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.வஹாப் தெரிவித்தார்.
திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது கிரான் பிரதேசத்தில் போதைவஸ்து தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹாப் தலைமையிலான குழுவினர் கிரான் பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபரை வழிமறித்து சோதனையிட்ட போதே இவரிடம் இருந்து 02 கிலோ 500 கிராம் கஞ்சாவும் அவர் பயன்படுத்திய பல்ஸர் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வாழைச்சேனை செம்மண்னோடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவருடன் தொடர்புபட்ட இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)