விமல் வீரவன்சவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும்-சந்திரிக்கா

பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தலைவர் ரவி வைத்தியலங்காரவிற்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீடமைப்பு, பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட “ஓஷன் வீவ் டெவலொப்பர்ஸ்” நிறுவனத்தின் மூலம் கடந்த காலங்களில் இடம் பெற்ற நிதி மோசடிக்கு எதிராக விமல் வீரவன்ச கைது செய்யபடவுள்ளார்.

அந்நிறுவனத்தினால் மத்தேகொட மற்றும் கஹாதுடுவ பிரதேசத்தில் வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 71 மில்லியன் பெறுமதியான 6 வீடுகளை கையளிக்கும் போது நிதி மோசடி இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பித்துள்ளது.

அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த வருமான இழப்பு மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தற்போது வரை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -