ஜுனைட் நளீமி-
தமிழர்களின் பூர்வீக பூமியான வாகரைப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் அத்துமீரி காணி அபகரிப்பில் ஈடுபடுவதாக அண்மையில் வாகரை பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சரின் அரசியல் பின்புலத்தில் ஊடக அறிக்கையும் அதனைத்தொடர்ந்து சட்ட நடவடிக்கை என்ற பெயரில் இனத்துவ அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு பாரம்பரியமாக வாகரைப்பிரதேசத்தில் குறிப்பாக காரமுனைப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை தமது பூர்வீக நிலப்பகுதிகளில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது.
குறித்த பத்திரிகையாயாளர் மாநாட்டில் வகரைப்பிரதேசம் தமிழ் சகோதர இனத்துக்கு மாத்திரமான பூர்வீகபிரதேசம் என்ற பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு முஸ்லிம்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த வரலாறு மூடிமரைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்தகால பயங்கரவாத சூழ்நிலையில் வாகரைப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சகோதர தமிழ் இனத்துடன் ஐக்கியமாக வாழ்ந்த வரலாறு தெரியாத இத்தகைய அரசியல் வங்குரோத்து பிடித்த முன்னாள் படுகொலை கலாச்சார ஆயுதக்குழுக்களை வழி நடாத்தியவர்களும் இன்று அரசியல் போர்வைக்குள் புகுந்து கொண்டு விடுதலை வரலாற்றை விற்றுப்பிழைப்பு நடாத்திக்கொண்டு தாம் காலத்தின் தர்ம கரங்களால் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுகின்றோம் என்ற யதார்த்த நிலையினை புரிந்து கொண்டு இனவாதம் பேசி மீண்டும் இனங்ககளுக்கிடையில் இனக்கிலேசத்தை உருவாக்கி குளிர்காய முனைகின்றனர்.
வகரைப்பிரதேச முஸ்லிம் குடியிருப்புக்கள்
வாகரைப்பிரதேச முஸ்லிம்கள் இலங்கைக்கு அரபுக்கள் வருகை தந்த போதே இப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனர் என்ற வரலாற்றினை வாசிக்க முடிகின்றது. குறிப்பாக கண்டிய இராச்சியத்துடனான அரபுக்களது தவலம வியாபார நடவடிக்கைகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து (கொட்டியாரம் என பழைய பெயர்) இப்பகுதிகலினூடாகவே இடம்பெற்றுள்ளது.
இப்போக்குவரத்து முறைமையினை மட்டக்களப்பு மான்மியமும் பரைசாற்றுவதை காணமுடிகின்றது. இன்றுவரை முஸ்லிம் பெயர்களைத்தாண்டிய அவக்கர் குடா, மீரானா ஊற்று, ஆளிமுட ஊற்று என பல முஸ்லிம் பெயர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களே. காரமுனைக் கிராமம் முன்னூரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் நிரந்தர குடிகொண்ட கிராமமாக காணப்பட்டது. காரமுனையில் காணப்படும் மீராசாகிபு சாகுல் ஹமீட் வலியுல்லா எனும் சன்மார்க்கப்போதகரது என கருதப்படும் சியாரம் முஸ்லிம்களது பூர்வீகத்தை பறை சாற்றி நிற்கின்றது.
இங்கு காணப்பட்ட பழைய பள்ளிவாசல் இதே இனவாதம் பேசித்திரியும் முன்னாள் பயங்கர வாதிகளினால் சேதமாக்கப்பட்டு நாட்டில் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்ட போது புதுப்பொலிவுடன் மீள கட்டப்பட்டது இவர்களுக்கு அறியாமலும் இல்லை. இங்கு காணப்பட்ட கிராம அபிவிருத்திச்சங்கத்தை எவ்வாறு இவர்களால் வரலாற்றில் இருட்டடிப்புச்செய்ய முடியும்.
காரமுனையில் பயங்கர வாதிகளினால் முஸ்லிம்கள் விரட்;டியடிக்கப்படு முன்னர் 104 குடும்பங்கள் வசித்து வந்ததற்கான போதிய ஆவணங்கள் காணப்படுகின்றது. முஸ்லிம்கலுக்குச்சொந்தமான ஆயிரக்கணக்கான வயல் நிலங்களை எவ்வாறு இவர்கள் சட்ட விரோத காணி அபகரிப்பு என குறிப்பிட முடியும். இப்பிரதேசத்தில் காணப்படும் குலத்தினை கட்டுவதற்கு இக்கிராம கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பூரன உதவிகளினூடே மேற்கொள்ளப்பட்டிருப்பதனை ஆவனங்கள் பறைசாற்றுகின்றன.
இதே போன்று மதுரங்கேணிக்குல முஸ்லிம் கிராமம், முஸ்லிம் பாடசாலை, பள்ளிவாசல், கிராம அபிவிருத்திச்சங்கம், தபால் நிலையம் என்பன கொண்டு அமைந்திருந்த வரலாறும் ஆவணங்களுடன் நிரூபனங்கலுக்காக காத்துக்கிடக்கின்றன.
இத்தகைய வரலாற்று பதிவுகளை மூடி மறைத்து முஸ்லிம்களது பூர்வீக நிலங்களில் மீள் குடியேறி வாஹ்ழ்வதற்கான பல்வேறு தடைகளை விதித்து இனச்சுத்திகரிப்புக்கு முயற்சிப்பது அமைதியாக வாழும் முஸ்லிம் தமிழ் சமூகங்களை தூண்டி விடும் முயற்சியாகவே காணப்படுகின்றது.
தேர்தல் நெருங்கிவரும் வேலையில் இத்தகைய இனவாத நடவடிக்கைகள் தங்களது ஆசனங்களை தக்கவைக்க மேற்கொள்ளும் முயற்சி என்பதனை தமிழ் சமூகமும் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் அவர்களும் தமது புதிய வாழ்வில் கரை படிந்த கரங்களை சுத்தப்படுத்திக்கொள்ள இரண்டு இனங்களையும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளை செய்வீர்கள் என்ற கொஞ்ச எதிர்பார்ப்பும் தவிடு பொடியானதாகவே முஸ்லிம் சமூகம் கருதுகின்றது. தங்களது தற்போதய மறுவாழ்வுக்காக முஸ்லிம் சமூகம் செய்த உதவிகளைக்கூட நீங்கள் மறந்திருப்பது வாஸ்த்தவம்தான். தங்களது கட்சி சின்னத்திலிருந்து கட்சிப்பாடல்கள் வரை முஸ்லிம்களது பங்களிப்பினையும் மறந்துவிட்டிருப்பீர்கள் என கருதி ஞாபகமூட்ட முஸ்லிம் சமூகம் முனைகின்றது. கல்குடாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐம்பது ஏக்கர் கரையோரக்காணிகளை வாழைச்சேனை பிரதேச சபையின் பெகோ இயந்திரத்தைப்பயன்படுத்தி காடழித்து கபளீகரம் செய்து பெகோ இயந்திரத்தை பளுதடையச்செய்தமையும் அதனை அரசு இயந்திரங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இந்நாட்டின் நல்லாட்சியின் பண்பாகவே அமையுமோ என்ற கேள்வியும் எழுகின்றது.
பேசுவதற்கு எத்தனையோ இருக்கின்றது. அவற்றினை வெளியே சொல்லி தமிழ் முஸ்லிம் மக்களிடம் தங்களைப்பற்றிய ஓரளவு நல்லபிப்பிராயத்தை கெடுத்துவிட நாம் முனையவில்லை. மனிதாபிமான ரீதியில் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பூர்வீக பூமிகளில் வாழ நீங்களும் சேர்ந்து செயற்படுவது பிரவிப்புன்னியமாக அமையுமென எதிர்பார்க்கின்றோம்.
முஸ்லிம் அரசியல் கையாலாகத்தனம்.
முஸ்லிம் அரசியல் கையாலாகத்தனம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள மீள் குடியேற்றம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இப்பிரதேச அரசியல் வாதிகள் தங்களது ஆசனங்களையும், வசதி வாய்ப்புக்களையும் கொந்துராத்துக்களையும் அனுபவித்துக்கொண்டிருப்பதனை முஸ்லிம் சமூகம் நன்கு அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கிழக்கின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளில் மௌனித்திருப்பதும் இப்பிரதேச பிரதி அமைச்சர் கையாலாகத்தனமாக செயற்படுவதும் கவலையளிக்கின்றது. இப்பிரதேசத்தில் அபிவிருத்தி அரசியளுமில்லை, உரிமை அரசியளுமில்லை என்ற அரசியல் அநாதரவான நிலைமையினை என்றும் சமூகம் சகித்துக்கொண்டிருக்காது என்பதனையும் விழங்கி கொள்ள வேண்டும்.
புதிய அரசியல் தலைமைகளும், புதிய சமூகத்தலமைகளும் இச்சமூகத்தை பாரமெடுத்து இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் கட்டியெளுப்பும் வரை எஞ்சியுல்லவற்றை கொஞ்சமாவது பாதுகாத்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள் என்பதே உங்களுக்கு வாக்களித்த மக்களது எதிர்பார்ப்பாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)