எம்.ஜே.எம்.முஜாஹித்-
தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஒலுவிலைச் சேர்ந்த பொறியியலாளர் ஐ.எல். ஹைதர் அலி அவர்களை அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்திற்கு மருதமுனையைச் சேர்ந்த பொறியியலாளர் ஜே.என். கரீம் நியமிக்கப்பட்டமையை கண்டித்து ஒலுவில் அன்ஸாரி ஜும்மா பள்ளிவாயல் முன்பாக பொதுமக்களினால் ஜும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ”இடமாற்றத்தை நிறுத்து”, ”பதவியினை வழங்கு”, ”பதவிகளை பறிக்காதே”, ”பதவி நீக்கம் செய்ய வேண்டாம்”, ”செய்யாதே செய்யாதே!” ”இடமாற்றம் செய்யாதே!” போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் இவரது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோஷமிட்டனர்.
இதன் போது, பொது மக்கள் அன்ஸாரி ஜும்மா பள்ளிவாயல் உப தலைவரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
