பார்வையற்ற மாணவர்களுக்கான பயிற்சி நிலைய திறப்பு விழா!

பி. முஹாஜிரீன்-
கிறீன் பிளவர்ஸ் ஸ்ரீலங்கா – விழிப் புலனற்றோர் அமைப்பினால் பார்வையற்ற பிள்ளைகளுக்கான விசேட கற்கை நிலையம் அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிறீன் பிளவர்ஸ் ஸ்ரீலங்கா – விழிப் புலனற்றோர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். மிஸ்தாக் தலைமையில் அக்கரைப்பற்று பதுர்நகரில் இடம்பெற்ற இவ்விசேட பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் தொழிலதிபர் கே.எல். அப்துல் றஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பீ.எம். ஹாஸீம் உரையாற்றுகையில்;

விசேட தேவையுள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் பல்வேறு வகையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் விசேட திறமைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு எதிர் காலத்தில் நல்ல வளமான வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

எமது பிரதேசங்களை பொறுத்தவரை விசேட தேவையுள்ளவர்கள் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் இவர்களுக்கான ஊக்கமோ வழிகாட்டியோ போதுமானதாக அமையாததால் அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது. அந்த நிலை மாற வேண்டும்.

விசேட தேவையுள்ளவர்களை இனங்கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி சமூகத்தில் சிறந்தவர்களாக வாழ்வதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விழிப்புலனற்றோர்களாக இருந்தாலும் இங்கு மிகத்திறமையானவர்கள் காணப்படுகின்றார்கள். சிலவேளைகளில், வலது குறைந்தோர் என்ற காரணத்தினால் சமூக வழமைகள் மரபுகளுக்கு பயந்து பெற்றோர்கள்கூட அவ்வாறான பிள்ளைகளை வெளியுலகை காட்டாமலேயே அறைகளுக்குள் பூட்டி வைத்திருக்கின்ற நிலைமைகளையும் நாம் காண்கின்றோம்.

உண்மையில் எமது பிரதேசத்தில் விழிப்புலனற்றோருக்காக இவ்வாறான ஒரு கற்கை நிலையம் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்படுவதானது மிகவும் பயனுள்ள சிறந்த விடயமாகும் இதற்காக கிறீன் பிளவர்ஸ் அமைப்பினரை நான் பாராட்டுகின்றேன். இவ்வாறான நல்ல காரியத்தினை முன்னெடுத்துள்ள விழிப்புணர்வற்றோர் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பிறையில் முறையிலான எழுத்து விசைப் பலகைகள் வழங்கப்பட்டதோடு மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.(ந)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -