பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த வகுப்பறைக் கட்டிடத் தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நாற்பது இலட்சம் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டித்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு கடந்த சனிக்கிழமை (23-05-2015)அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவரும்,மருதமுனை அமைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இந்த கட்டிடத்திற்கான விசேட நிதியை ஒதுக்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அடிக்கல்லை நடுகை செய்து கட்டிடப்பணியை ஆரம்பித்து வைத்தார். இதில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விசேட அதிதியாக சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மற்றும் அதிதிகளாக கல்முனை கல்வி வலய தெழில் நுட்ப உத்தயோகத்தர்களான ஏ.எம்.ஏ.அஸீஸ்,வி.லோகானந்தன,; மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன், சட்டத்தரணி எப்.எம்.அமீறுள் அன்சார் மௌலானா,முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழு முக்கியஸ்;தர் எம்.ஐ.எம்.ஆரிப்,தாதி உத்தியோகத்தர் பி.எம்.எம்.நஸ்றுத்தீன் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



