ஏஎம் றிகாஸ்-
துபாய் நாட்டின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐயாயிரம் தமிழ் - முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடிநீர் வசதியினைப் பெறுவதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
'நேயம்' அமைப்பின் தலைவர் ஐ.இஷ்ஹாக் தலைமையில் ஏறாவூர் மௌலானா சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 160 வறிய குடும்பங்களுக்கு தண்ணீரத் தாங்கி, பம்பி உள்ளிட்ட பொருட்கள் கையளிக்கப்பட்டன.
ஏறாவூர்- மிச்நகர், மீராகேணி ,ஐயங்கேணி ,தாமரைக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதனால் கிணறுகள் அமைக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் குழாய்க்கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரைப் பெறுவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.