அஜித்தின் தங்கையாக லக்ஷ்மி மேனன்!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படம் அஜித்தின் 56 ஆவது படமாகும் சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர், தற்போது 2 ஆவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார் மேலும், அனிருத் இசையமைக்கிறார் ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் இப்படத்திற்கான பூஜை கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை போடப்பட்டதையடுத்து விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த படத்தில் வில்லனாக மொடலாக இருந்து நடிகராக மாறிய பொலிவுட் நடிகர் கபீர் சிங் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க லக்ஷ்மி மேனன் ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் இந்த வேடத்தில் நடிக்க நித்யா மேனனை அணுகினார்கள் அவர் மறுத்து விட்டதன் பின்னர் பிந்து மாதவி நடிப்பதாக கூறப்பட்டது பின்னர் அந்த தகவலை அவரும் மறுத்தார்.

மேலும், சந்தானம், தம்பி ராமையா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் இந்த படத்திற்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்.

மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா இந்த படத்திலும் அஜித்துடன் கை கோர்த்துள்ளார்.

அடுத்த மாதம் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -