புதிய கார் வாங்கவில்லை;அஜித்!

டிகர் அஜித், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு செய்தி பரவியது.

அந்த காரை வடபழனி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டுவந்தபோது எடுத்த படங்கள் என வெள்ளை நிற பிஎம்டபிள்யூ ஐ-8 காரின் படங்களும் இணையம் முழுக்க வலம் வந்தன.

கார் பந்தயத்தில் பிரியம் கொண்டவர் என்பதால், அஜித் இதை வாங்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில், ‘பாத்தீங்களா.. நம்ம தல காரை’ என அஜித் ரசிகர்கள் பரவசப்பட்டார்கள்.

ஆனால், “அஜித், பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்கிற செய்தி தவறு. தேவையில்லாத செய்திகளைப் பரப்பவேண்டாம்,” என்று அஜித் தரப்பிலிருந்தே விளக்கம் வெளிவந்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -