ஜனாதிபதிக்கும், கட்சித்தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு!

உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் கட்சிகளுக்கிடையில் ஏற்படும் இணக்கப்பாட்டையடுத்து, உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், சட்ட வியாக்கியானம் கோரி உயர்நீதிமன்றத்துக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது என்று கேந்திர தொழில் முயற்சி முகாமைத்துவ முகராண்மையின் தலைவர் அசோக அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து நேற்று நடத்திய உத்தேச புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஊடகங்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

"20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும், அடுத்து இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய இடம்பெறுமா என்பதை எல்லை நிர்ணய சபையே தீர்மானிக்கும்.

புதிய முறைக்கமைய தேர்தலை நடத்தவேண்டுமாயின், எல்லை நிர்ணய சபையின் அறிக்கையைப் பெறவேண்டும். அந்த அறிக்கை வெளிவந்த பின்னர்தான் தேர்தலுக்குச் செல்ல முடியும். இல்லாவிட்டால் அறிக்கை வெளிவரும்வரை தேர்தலைப் பிற்போடவேண்டிய நிலை ஏற்படும்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஒரு வருடத்தில் வெளியிடலாம். அல்லது அவசரமாக செய்து முடிக்கவேண்டுமாயின், 3 மாதங்களுக்குள் வெளியிடலாம். அல்லது தேவைக்கேற்றவாறு அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிடலாம்''ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -