முன்னாள் ஜானதிபதி மஹிந்தவின் தீவிர விசிவாசியாக அறியப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினரான அப்துல் சத்தார் ஹராமான மஹிந்தவை
ஹலாலாக்குவோம் எனவும் சிங்கள பௌத்தர்களுக்கு உலகில் இருக்கும் ஒரே நாடு இலங்கையே ,எனவே இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூகங்கள் , முஸ்லிம்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அடங்கி வாழ பழகிக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து குருநாகலில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி தெரிவித்துள்ளார்
பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளுக்கு முரண்படாமல் முஸ்லிம்கள் அடங்கி வாழ வேண்டிய நாடுதான் இது ,என்பதை முஸ்லிம் மக்கள் உணர்த்து கள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
லங்காமுஸ்லிம் (ச)
